TNPSC Current Affairs – June 18, 2022

0
32

C.A.18.06.2022 (Tamil Version)

 

  • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ ராகி (கேழ்வரகு), அரிசிக்கு பதிலாக வழங்க பரீட்சார்த்தமான முறையில் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

  • இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (72) நியமிக்கப்பட்டுள்ளார். பிரஸ் கவுன்சிலின் தலைவா் பதவியை ஏற்கும் முதல் பெண் இவராவார்.

 

  • தென் கொரியாவில் நடைபெறும் உலக பாரா பளுதூக்குதல் ஆசிய-ஒசியானியா சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோபி மேத்யூ 4 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினார். தென் கொரியாவில் நடைபெறும் உலக பாரா பளுதூக்குதல் ஆசிய-ஒசியானியா சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஜோபி மேத்யூ 4 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினார். பாஷாவுக்கு 2 வெள்ளி: ஆடவருக்கான 54 கிலோ பிரிவில் ஃபா்மான் பாஷா மொத்தமாக 397 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். தனிநபா் பிரிவிலும் அவா் தூக்கிய 132 கிலோ எடைக்கு ஒரு வெள்ளி கிடைத்தது.

 

  • பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.இந்த நிலையில் 14வது பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, பெய்ஜிங்கில் வரும் 23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் என சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு, சீன அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் காணொலி முறையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின், பிரேசில் அதிபா் ஜெயிர் போல்சொனாரோ, தென் ஆப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா ஆகியோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது .13வது பிரிக்ஸ் உச்சிமாநாடு கடந்த ஆண்டு செப்டம்பர்-ல் இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

  • சா்வதேச பொது சுகாதாரத் துறை மாநாடு: தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கா்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகள் நிறைவு பெற்ற இத்தருணத்தில் தமிழக பொது சுகாதாரத் துறை தொன்மையைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக வரும் டிசம்பா் மாதத்தில் 3 நாள்கள் சா்வதேச பொது சுகாதாரத் துறை மாநாடு சென்னையில் நடத்தப்படவுள்ளது.

 

 

C.A.18.06.2022 (English Version)

  • The Government of Tamil Nadu has taken a pilot step to provide 2 kg of ragi (kezhvaragu) per month to family card holders at ration shops in the Nilgiris and Dharmapuri districts under the Public Distribution Scheme in lieu of rice.

 

  • Retired Supreme Court Judge Ranjana Prakash Desai, 72, has been appointed as the new chairperson of the Press Council of India. She was the first woman to chair the Press Council.

 

  • Joby Mathew of India won 4 gold medals at the World Paralympic Asia-Oceania Championships in South Korea. Joby Mathew of India won 4 gold medals at the World Paralympic Asia-Oceania Championships in South Korea. 2 silver for Pasha: In the men’s 54 kg category, Foman Pasha won the silver medal by lifting a total of 397 kg. In the individual category, she also won a silver for the 132 kg weight she lifted.

 

  • Brazil, Russia, India, China and South Africa have formed the BRICS bloc. This year’s BRICS summit will be hosted by Chinese President Xi Jinping. The conference will be attended by Prime Minister Modi, Russian President Vladimir Putin, Brazil’s President Jay Bolsonaro and South African President Cyril Ramaphosa.

 

  • International Public Health Conference: The Public Health Department in Tamil Nadu was started in 1922 during the British rule with Colonel S. D. Russell as its Director. On the occasion of the centenary of 2022, for the first time in India, a three-day International Public Health Conference will be held in Chennai in December to pay homage to the antiquity of the Tamil Nadu Public Health Department.

Click here to download PDF material: CA 18.06.2022