TNPSC Current Affairs – June 17, 2022

0
37

C.A.16.06.2022 (Tamil Version)

 

  1. ஆசியாவிலேயே மிக செங்குத்தான மலை ரெயில் பாதையில் செல்லும் நீலகிரி மலை ரெயிலில் முதன் முதலாக பிரேக்ஸ் மென்னுக்கு பதிலாக பிரேக்ஸ் உமன் பணிக்கு சிவஜோதி என்ற பெண்மணியை ரெயில்வேத்துறை நியமனம் செய்துள்ளது. இவர் கடந்த 8 வருடங்களாக குன்னூர் கோச் மற்றும் வேகன் பிரிவில் பணியாற்றி வந்தார். நீலகிரி மலை ரெயில் முதல் பிரேக்ஸ் வுமனாக பணியாற்றிவரும் சிவஜோதிக்கு சுற்றுலா பயணிகள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.
  2. 2022ம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட பெருமுயற்சிகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சிறப்பாக செயலாற்றிய கோவை, கரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கும் நிகழ்வு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரனுக்கு தங்கப் பதக்கமும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு வெள்ளிப் பதக்கமும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கருக்கு வெண்கலப் பதக்கமும் மற்றும் பாராட்டுப் பத்திரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  3. அக்னிவீரரின்ன் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. இப்படிப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெறும் அக்னிவீரர், 12வது தேர்ச்சி பெற்றவராக கருதப்பட்டு, அதற்கான சான்றிதழும் பெறுவார்.
    • பணிக்கான வயது வரம்பு: 17 ½ – 21 வயது வரை (நடப்பாண்டில் தற்போது 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது)
    • பணிக்காலம்: 4 ஆண்டுகள்
    • காலிப் பணியிடங்கள்: 45,000 முதல் 50,000 (ஆண்டுதோறும்)
    • பயிற்சி காலம்: 6 மாதங்கள் * சம்பளம்: ரூ. 30,000-ரூ. 40,000
  • அக்னிவீரர்களுக்கான கல்வித் தகுதி, பல்வேறு பிரிவுகளில் சேர்வதற்கான தகுதி நடைமுறையில் உள்ளது. ஜெனரல் டூட்டி (ஜிடி) சிப்பாய்க்குள் நுழைவதற்கு, கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு ஆகும்.’

 

C.A.16.06.2022 (English Version)

 

  1. The Railways has appointed Sivajothi as the first woman to replace Brakes Men on the Nilgiri Mountain Railway, the steepest mountain railway in Asia. He has been with the Coonoor Coach and Wagon Division for the past 8 years. Tourists congratulate Sivajothi, who has been serving as the first Brakes Woman on the Nilgiri Mountain Rail.
  2. The State Girl Child Protection Day Awards 2022 were held at the Chennai General Secretariat to present medals and certificates of appreciation to the Heads of Government of Coimbatore, Karur and Thanjavur Districts who have excelled in accelerating intensive monitoring activities in an effort to raise the birth sex ratio of girls. Chief Minister MK Stalin presented a gold medal to Coimbatore District Administrator GS Sameeran, a silver medal to Thanjavur District Administrator Dinesh Bonraj Oliver and a bronze medal to Karur District Administrator T. Prabhushankar.
  3. Minimum Educational Qualification of Agniveer 10th Class Pass. In such a case, the firefighter, who retires after four years of service, will be considered as the 12th graduate and will receive the relevant certificate.
    • Age limit for work: 17 ½ – 21 years (currently increased to 23 at present)
    • Duration of service: 4 years
    • Vacancies: 45,000 to 50,000 (per annum)
    • Training period: 6 months * Salary: Rs. 30,000-Rs. 40,000
    • Educational eligibility for firefighters is based on eligibility to enroll in a variety of disciplines. To enter the General Dooty (GT) Soldier, the educational qualification is 10th class. ‘

Click here to download PDF material: CA 17.06.2022