TNPSC Current Affairs – June 15, 2022

0
28

C.A.15.06.2022 (Tamil Version)

 

  1. உலக ரத்த தான தினம் – ஜூன் 14

 

  1. மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்துமாறு பல்வேறு அரசுத் துறைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

 

  1. சென்னை ஐஐடி ஆய்வுப் பூங்கா மற்றும் ஐபிஎம் இன்கியூபேஷன் மையம் ஆகியவை ஒருங்கிணைந்து வங்கியின் நிதிசார்ந்த விவகாரங்களில் நிலவும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கை தயாரித்துள்ளன. இதில் வங்கி சேவைகளை பெறுவதில் வருவாய் குறைந்த பிரிவினா், மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீா்வுகள் தொடா்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கை சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆய்வு பூங்காவில் செவ்வாய்க்கிழமை (14.6.2022) வெளியிடப்பட்டது.

 

  1. தமிழ் இலக்கியத்தினுடைய மிகப்பெரும் ஆளுமை, முற்போக்கு இடதுசாரி இலக்கியத்தின் முன்னோடி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தை உருவாக்கியவர். செம்மலர் இலக்கிய இதழை துவக்கியவர், எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று மதுரை எம்.பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

  1. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) ரூ.2,877 கோடியில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம் தொடர்பாக, தமிழக வேலைவாய்ப்புத் துறை மற்றும் புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

  1. பிறப்புப் பதிவு கட்டாயமில்லா சான்று (நான் மேன்டட்டரி சா்டிஃபிகேட்) வழங்குவதற்கான நடைமுறைகளையும், விளக்கங்களையும் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. உரிய ஆவணங்கள் ஏதுமில்லாதவா்கள், தங்களது பிறப்பைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்காமல், அதற்கென தனி சான்றிதழ் வழங்கும் முறையை மாநில தலைமை பிறப்பு – இறப்பு பதிவாளா் மூலம் மேற்கொள்ளலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

  1. ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தலைமை செயலாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் சார்பில் வெ இறையன்பு பங்கேற்றுள்ளார்.

 

  1. மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த மே மாதத்தில்88% என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. சென்னையில் நடைபெற்ற 61-வது தேசிய தடகள போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. ஹரியானா இரண்டாம் இடத்தையும், உத்திர பிரதேசம் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

 

  1. நட்பு நாடுகளான கனடா – டென்மார்க் இடையில் 49-ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்துள்ளது.

 

  1. இந்திய ரிசர்வ் வாங்கி ரெப்கோ வட்டிவிகிதத்தை வரும் டிசம்பர் மாதத்துக்குள்9% என்ற அளவில் நிர்ணயிக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது

 

C.A.15.06.2022 (English Version)

 

  1. The World Blood Donor Day – June 14

 

  1. Prime Minister Narendra Modi has instructed various government departments to implement a plan to select 10 lakh people for central government jobs in the next one and a half years.

 

  1. Chennai IIT Research Park and IBM Incubation Center have jointly prepared a study on the Bank’s financial challenges. It makes suggestions on the challenges faced by senior citizens, the disadvantages of accessing banking services, and the dilemmas involved. The study was published on Tuesday (14.6.2022) at the IIT Research Park in Chennai.

 

  1. The greatest personality of Tamil literature, the forerunner of progressive left wing literature, the founder of the Tamil Nadu Progressive Writers Artists Association. Madurai MP Venkatesh has said that the writer K. Chinnappa Bharathi, the founder of the Chemmalar literary magazine, should nationalize his books.

 

  1. A Memorandum of Understanding (MoU) was signed between the Tamil Nadu Employment Department and Tata Technologies in Pune in the presence of Chief Minister Stalin on a Rs 2,877 crore project to upgrade Government Vocational Training Centers (ITIs) to technology hubs.

 

  1. The Department of Public Health has published the procedures and explanations for issuing the Mandatory Certificate of Birth Registration (I Mandatory Certificate). It has been explained that those who do not have any relevant documents can be issued a separate certificate by the State Chief Birth-Death Registrar without having to register their birth.

 

  1. The Chief Secretaries’ Conference is being held in Dharamsala, Himachal Pradesh. Wee Irayanpu has participated in this on behalf of Tamil Nadu.

 

  1. Inflation, as measured by Wholesale Price Index (WPI), rose to 15.88% in May.

 

  1. Tamil Nadu won the overall championship at the 61st National Athletics Championships in Chennai. Haryana was second and Uttar Pradesh was third.

 

  1. The 49-year-old Hans Island dispute between friendly Canada and Denmark has come to an end due to an agreement reached between the two countries.

 

  1. The Reserve Bank of India will raise interest rates on Repco by 5.9% by December. According to the rating agency Fitch

Click here to download PDF: CA 15.06.2022