Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – July 14, 2022

TNPSC Current Affairs – July 14, 2022

0
26

C.A.14.07.2022 (Tamil Version)

  1. பிரான்சிய தேசிய தினம்: ஜூலை 14 (“பாஸ்டில் தினம்”) புனிதமான இராணுவ அணிவகுப்புகள் மற்றும் எளிதான நடனம் மற்றும் பட்டாசுகளின் கலவையுடன் கொண்டாடப்படுகிறது. பாரிஸின் புரட்சிகர நாட்களில் ஒன்று, இப்போது தேசிய விடுமுறையாக உள்ளது.

 

  1. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

 

  1. தென்கொரியாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எப் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம்  கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே ஜோடி 17-13 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரியின் எஸ்தர் மெஸ்ஜாரோஸ்-இஸ்வான் பெனி இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்திய வீரர் அர்ஜூன் பபுடா தங்கம் வென்று இருந்தார்.

 

  1. இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சன் தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி தலைவா் பதவியையும் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் காலக்கெடு நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த நிலையில் சஜித் ஜாவித் உள்பட 3 பேர் போட்டியில் இருந்து பின்வாங்கினர். இதன் மூலம் கட்சித்தலைவர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் 8 போட்டியாளா்கள் இருந்தனா். இதன் முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் 88 வாக்குகள் பெற்ற ரிஷி சுனக் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். வர்த்தக மந்திரி பென்னி மொர்டான்ட் (67 வாக்குகள்), வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் (50), முன்னாள் மந்திரி கெமி படனாக் (40), டாம் டுகெந்தாட் (38) அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.

 

  1. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது பதவி விலகலுக்கு முன்னதாக, புதன்கிழமை அதிகாலை மாலத்தீவில் தஞ்சம் அடைந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்ததாக, நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்தார்.

 

  1. தமிழக அரசு 38 மாவட்டங்களிலும் பருவநிலை மாற்றப் பணிகளை நிறுவியுள்ளது. பணிகளுக்கு கலெக்டர்கள் பணி இயக்குனர்களாக தலைமை தாங்குவார்கள்.

 

  1. Global Gender Gap Index 2022 இல்மொத்தமுள்ள 146 நாடுகளில்இந்தியா 135 வதுஇடத்தைப்பிடித்துள்ளதுமற்றும் “உடல்நலம்மற்றும்உயிர்வாழ்வு” துணைக்குறியீட்டில்உலகின்மிகமோசமானசெயல்திறன்கொண்டநாடாகஉள்ளது, அங்குஅது 146 வதுஇடத்தில்உள்ளது. இந்தியாவும்அதன்அண்டைநாடுகளில்மோசமானதரவரிசையில்உள்ளதுமற்றும்பின்தங்கியுள்ளது.வங்கதேசம் (71), நேபாளம் (96), இலங்கை (110), மாலத்தீவு (117), பூடான் (126)தெற்காசியாவில்இந்தியாவைவிடஈரான் (143), பாகிஸ்தான் (145), ஆப்கானிஸ்தான் (146) மட்டுமேமோசமாகச்செயல்படுகின்றன.

 

C.A.14.07.2022 (English Version)

  1. French National Day: July 14 (“Bastille Day”) is celebrated with solemn military parades and a mix of light dancing and fireworks. One of Paris’s revolutionary days is now a national holiday.

 

  1. The central government has announced that corona booster vaccine will be given free of cost to people above 18 years of age across the country. Ahead of the 75th Independence Day celebrations, booster vaccination is being administered free of charge for 75 days from tomorrow.

 

  1. India wins 2nd gold in ISSF Shooting World Cup to be held in South Korea. In the final of the 10m air rifle mixed team event, India’s Meghuli Ghosh-Saku Tushar Mane pair defeated Hungary’s Esther Mesjaros-Iswan Beni pair 17-13 to win the gold medal. This is India’s 2nd gold medal in this tournament. Indian athlete Arjun Babuta had already won gold in the 10m air rifle category.

 

  1. British Prime Minister Boris Johnson resigned as Prime Minister and leader of the ruling Conservative Party last week. In this situation, three people including Sajid Javid withdrew from the contest as the deadline for filing the nomination petition for the election ended yesterday evening. With this, there were 8 contestants in the primary election for the post of party leader. The first round of voting was held yesterday. In this, 358 MPs of the Conservative Party voted. Rishi Sunak who secured 88 votes won and advanced to the next round. Trade Minister Benny Mordant (67 votes), Foreign Affairs Minister Liz Truss (50), former minister Kemi Patanac (40) and Tom Dugentat (38) followed.

 

  1. Sri Lankan President Gotabaya Rajapaksa, who fled the island and took refuge in the Maldives early on Wednesday, ahead of his promised resignation, appointed Prime Minister Ranil Wickremesinghe as acting President, the island’s Parliamentary Speaker said

 

  1. The Tamil Nadu governement has established the Climate change missions in all 38 districts. The missions will be headed by the collectors as the mission directors.

 

  1. India ranks 135 among a total of 146 countries in the Global Gender Gap Index 2022 and is the worst performer in the world in the “health and survival” sub-index where it is ranked 146. India also ranks poorly among its neighbours and is behind Bangladesh (71), Nepal (96), Sri Lanka (110), Maldives (117) and Bhutan (126). Only Iran (143), Pakistan (145) and Afghanistan (146) perform worse than India in south Asia.

Click here to download PDF: Download Now