TNPSC Current Affairs – July 05, 2022

0
45

C.A.05.07.2022 (Tamil Version)

 

  1. ஜூலை 5, 2017 – முதல் தேசிய காயம் தடுப்பு தினம்
  2. ஸ்டார்ட் அப் ரேங்கில் முன்னணி இடம் பெற்ற டான்சிம் குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாநிலங்களின் ஸ்டார்ட்அப் ரேங்கிக் 2021-ல் முன்னணி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  3. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம் என்று முதலீட்டாளா்கள் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் ‘முதலீட்டாளா்களின் முதல் முகவரி-தமிழ்நாடு’ என்ற தலைப்பிலான மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்க்கும் வகையில் 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இதன்மூலம் 74 ஆயிரத்து 898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வணிக எளிதாக்குதல் திட்டத்தில் 14-ஆவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தைப் தமிழ்நாடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது
  4. காரியாபட்டி புல்லூரில் 1100 ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட சமணப்பள்ளியின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புல்லூரில் 9 துண்டு கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன. அனைத்தும் வட்டெழுத்து, கிரந்த எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. இரண்டு அரசர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் உள்ளன. முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் 4ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும், ராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும் உள்ளன. இதனை கணக்கிட்டு பார்க்கும் போது ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமையானது என தெரிகிறது. புல்லூரின் பழைய பெயர் திருப்புல்லூர். இது ஒரு சமண பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது. இக்கோயிலின் பெயர் திருப்புல்லூர் பெரும்பள்ளி என்றும், உள்ளிருக்கும் இறைவன் அருகர் பட்டாளகர் என்றும் அறிய முடிகிறது. இக்கோவிலுக்கு நந்தா விளக்கெறிக்க, ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பாண்டிய நாட்டில் சமண மதம் மிகச் சிறப்பான நிலையில் இறந்ததற்கு சமண பள்ளியே சிறந்த உதாரணமாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் குரண்டியில் திருக்காட்டாம் பள்ளி என்ற சமணப்பள்ளி கண்டறியப்பட்டது. தற்போது புல்லூரில் கண்டறியப்பட்ட சமணப்பள்ளி, மாவட்டத்தின் 2வது சமண பள்ளியாகும். குண்டாற்றின் மேல்கரையான, மேல உப்பிலிக்குண்டில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் சமணம் சார்ந்த வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து வருவது சிறப்பான செய்தியாகும். இங்குள்ள 9 துண்டு கல்வெட்டுகளை முறையாக படி எடுத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
  5. 2022 டிஜிட்டல் இந்தியா வாரத்தில் பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வின் போது, மெரி பெஹ்சான், டிஜிட்டல் இந்தியா பாஷினி, டிஜிட்டல் இந்தியா ஜெனிசிஸ் மற்றும் சிப்ஸ் டு ஸ்டார்ட்அப் (C2S) உள்ளிட்ட பல டிஜிட்டல் போர்டல்களை தொடங்கி வைத்தார். . ஆதார், யுபிஐ, கோவின் மற்றும் டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் தளங்களை, குடிமக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமலோ அல்லது இடைத்தரகர்களை அணுகாமலோ ஆன்லைனில் சேவைகளைப் பெறுவதால், “வாழ்க்கையின் எளிமைக்கு” பங்களித்த சேவைகளின் எடுத்துக்காட்டுகளாக பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். மக்கள் நலன் மற்றும் நிர்வாகத்தை வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு அரசு துணையாக இருப்பதால், உலக அளவில் டிஜிட்டல் புரட்சியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

 

 

C.A.05.07.2022 (English Version)

 

  1. The first National Injury Prevention Day on July 5, 2017.
  2. Chief Minister M.K.Stalin has congratulated Danzim Group for topping the start-up ranks. It is noteworthy that the Tamil Nadu Innovation and Innovation Movement (TANSIM) and the Micro, Small and Medium Enterprises Department of the Tamil Nadu Government have been ranked first in the States Startup Ranking 2021.
  3. Chief Minister M.K.Stalin said at the investors’ conference that we will move towards the goal of ‘everything for everyone’. A conference titled ‘Investors’ First Address-Tamil Nadu’ was held in Chennai on Monday. In this, 60 MoUs were signed in the presence of Chief Minister M. K. Stalin to attract investments worth Rs. 1.25 lakh crore. This is expected to provide employment to 74 thousand 898 people. It is noteworthy that Tamil Nadu has been ranked third from 14th in the Ease of Doing Business programme
  4. Traces of a Jain school functioning 1100 years ago have been found at Kariyapatti Pullur. 9 fragments of inscriptions were found at Bullur. All are written in cuneiform, cursive script. The names of two kings are mentioned in these inscriptions. There is an inscription of the 4th regnal year of the early Pandya king Maran Sadayan and an inscription of the Nivandam given to this temple by Rajaraja Chola. When you calculate it, it seems to be 1000 years old. The old name of Pullur was Tirupullur. It has been functioning as a Jain school. The name of this temple is known as Tirupullur Perumpalli and the Lord inside is Arugar Pattalakar. Inscriptions indicate that goats were donated to this temple by Nanda to light the lamp. The Jain school is the best example of the death of Jainism in its best form in the Pandyan country. A Jain school named Tirukkatam School was found at Kurandi in Virudhunagar District. Now the Jain school found in Bullur is the 2nd Jain school in the district. A sculpture of Tirthankar was found at Mela Uppilikund, on the upper bank of the Kund. It is good news that Jain historical evidence is being found in this region. The archeology department has been informed to study the 9 pieces of inscriptions here properly
  5. PM Modi launched multiple digital portals at the ongoing Digital India Week 2022, including single sign-in portal Meri Pehchaan, Digital India Bhashini, Digital India Genesis and Chips to Startup (C2S), during an event held in Gandhinagar in his native State of Gujarat. PM Modi cited digital platforms like Aadhaar, UPI, Cowin and Digilocker as examples of services that have contributed to the “ease of living” as citizens get services online without going to government offices or approaching middlemen. Prime Minister Narendra Modi asserted that India is leading the world in digital revolution as the government’s espousal to digital technology in welfare and governance delivery is changing the lives of the people of the country.

Click here to download PDF: CA 05.07.2022