TNPSC Current Affairs – July 04, 2012

0
30

C.A.04.07.2022 (Tamil Version)

  1. மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கள்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை கூடிய பேரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவை சோ்ந்த ராகுல் நார்வேகா் தோ்ந்தெடுக்கப்பட்டார்.

 

  1. நடப்பு நிதியாண்டில் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற வெளிநாட்டினர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாமிடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நடப்பு நிதியாண்டின் ஜூன் 15-ம் தேதி வரை 6,61,500 வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 3 அல்லது 5 ஆண்டுகளுக்குத் தொடா்ந்து வசித்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்தவா்கள் தாக்கல் செய்த விண்ணப்பங்களின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு குடியுரிமை பெற்றவா்களில் மெக்ஸிகோவைச் சோ்ந்தவா்கள் (24,508) அதிகபட்சமாக உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவைச் சேர்ந்தவா்கள் (12,928) உள்ளனர்.

 

  1. கிரீன்லாந்தின் மிக உயர்ந்த பனி சிகரத்தில் இந்திய மூவர்ண கொடியுடன் மலையேற்ற வீரர் அஜித் பஜாஜ் அவரது மகள் தியா பஜாஜ் ஏறி சாதனை படைத்துள்ளனர்

 

  1. தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 21 மாநகராட்சி, 188 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் திமுக சார்பிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பிலும் வெற்றி பெற்ற சுமார் 9,000 வார்டு உறுப்பினா்கள் பங்கேற்ற ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்ற தலைப்பிலான நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக் குட்டைமேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 

  1. விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் நடந்தது. இதில் கர்நாடக மாநில சினி ஷெட்டி இந்திய அழகியாகவும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரூபல் சவுகான் முதல் ரன்னர் அப் ஆகவும், உத்தரப் பிரதேசத்தின் ஷினாதா சவுகான் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்வாகினர்.

 

C.A.04.07.2022 (English Version)

  1. A vote of confidence on the Chief Minister Eknath Shinde-led government will be held on Monday (July 4) in Maharashtra. In the Assembly meeting held on Sunday, BJP candidate Rahul Narvek was elected as the Speaker.

 

  1. India ranks second in the list of foreigners who have acquired US citizenship in the current fiscal year. According to the Center for Citizenship and Immigration Services, 6,61,500 foreigners have been granted citizenship in the United States till June 15 of the current financial year. Citizenship is granted on the basis of applications filed by those who fulfill various conditions, including having lived in the United States for 3 or 5 years continuously. Among those who obtained citizenship, the highest number came from Mexico (24,508). It is followed by people from India (12,928).

 

  1. Mountaineer Ajit Bajaj and his daughter Diya Bajaj have climbed Greenland’s highest snow peak with the Indian tricolor flag.

 

  1. About 9,000 ward members who won the DMK and its alliance parties in 21 Municipal Corporations, 188 Municipalities, and 490 Municipalities in the Tamil Nadu Urban Local Government polls, titled ‘Good Governance in Local Government’, were held at Pomaik Kutaimet on the Namakkal-Salem National Highway on Sunday.

 

  1. The VLCC Femina Miss India pageant was held at the Jio World Convention Center in Mumbai. In this, Sini Shetty from Karnataka state was selected as Miss India, Rubal Chauhan from Rajasthan state as first runner up and Shinatha Chauhan from Uttar Pradesh as second runner up.

 

Click here to download PDF: CA 04.07.2022