TNPSC Current Affairs – July 02, 2022

0
31

C.A.02.07.2022 (Tamil Version)

  1. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ‘செமிகண்டக்டர்’ உயர் தொழில்நுட்பப பூங்காவை அமைக்க உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் 1-ந் தேதி (நேற்று), தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தில் 25 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. சர்க்யூட் வடிவமைப்பாளர்கள், உற்பத்தி பொருள் வினியோகஸ்தர்கள், உபகரண வினியோகஸ்தர்கள் மற்றும் செமிகண்டக்டர் அவுட்சோர்சிங் மற்றும் பரிசோதனை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான திட்டங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்படும். இதன் காரணமாக உருவாகக்கூடிய சூழல் அமைப்புகளின் மூலம் 25 ஆயிரம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
  2. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் கலைப்பொருட்களை தேர்வு செய்து வைக்க மத்திய கலாச்சார அமைச்சகம் 3 குழுக்களை அமைத்துள்ளது. இதில் இரண்டு குழுக்கள் மத்திய சுகாதாரத்துறை செயலர் கோவிந்த் மோகன், இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் செயலர் சச்சிதானந்த ஜோஷி ஆகியோரின் தலைமையில் இயங்கும்.
  3. ஆம் ஆத்மி கட்சி தோ்தல் வாக்குறுதியில் அறிவித்த வீட்டிற்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரத் திட்டத்தை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
  4. இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் போர்க்கருவிகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து வழங்கி வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகின்றன.அந்தவகையில் பெங்களூருவில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் முதன்மை ஆய்வுக்கூடமான ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு நிறுவனம் ஆளில்லா தானியங்கி விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா தானியங்கி விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

 

 Read Monthly Current Affairs – Click Here  Download Free –  TNPSC PYQ – Click here
 Attend Current Affairs Quiz – Click here  Download TNPSC Group – 2 Syllabus – Click here

 

Also Read previous days current affairs : Click here

C.A.02.07.2022 (English Version)

  1. Singapore-headquartered IGSS Ventures is planning to set up a 300-acre ‘Semiconductor’ Hi-Tech Park in Tamil Nadu. For this purpose, in the presence of Chief Minister M. K. Stalin, a Memorandum of Understanding was signed between the Tamil Nadu Government Mentorship Company and IGSS Ventures Company on the 1st (yesterday) at the Chief Secretariat. The company plans to invest 25,600 crore rupees in the project in the next 5 years and provide direct employment to 1,500 people. Projects for circuit designers, manufacturing material distributors, equipment distributors and semiconductor outsourcing and testing companies will be set up in the park. Due to this, 25 thousand additional jobs will be available through the eco-systems that can be created.

  2. The Union Ministry of Culture has set up 3 committees to select artefacts for the newly designed Parliament building. The two committees will be headed by Union Health Secretary Govind Mohan and Indira Gandhi National Arts Center Secretary Satchidananda Joshi.
  3. Punjab Chief Minister Bhagwant Mann on Friday launched the scheme of 300 units of electricity per household announced in the election promise of the Aam Aadmi Party.
  4. The Indian Defense Research and Development Organization (DRDO) manufactures and supplies weapons, logistics, and munitions to the Indian Defense Forces. For this, laboratories are operating in different parts of the country. In this way, the Aeronautical Development Institute, the main laboratory of DRDO in Bengaluru, has designed and manufactured an unmanned automatic aircraft. An indigenously manufactured unmanned aerial vehicle has been successfully tested

Click here to download PDF material: Download Now

Read Monthly Current Affairs –

Attend Current Affairs Quiz –