TNPSC Current Affairs – Oct 13, 2022

0
49

CA 13.10.2022(Tamil Version)

மாநில செய்திகள்

1. தேவாங்கு சரணாலயம்

  • இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயங்கள் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பில் அமைக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தேவாங்கு இரவுநேர பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இதை பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது.
  • இதனால் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தேவாங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச மையமானது தேவாங்கு அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இணைத்துள்ளது.
  • தேவாங்கைப் போன்று வேறு பல அழிந்து வரும் உயிரினங்களை காக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • அதன்படி கடல் பசு பாதுகாப்பகம், கழுவேலி பறவைகள் சரணாலயம், அகத்தியர் மலை, யானைகள் பாதுகாப்பகம், திருப்பூர் சரணாலயம், 13 ஈரநில பகுதிகளை ராம் சார் சாசனப் பகுதிகளில் இடம்பெற செய்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

2. எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயம் விருது

  • எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயம் சார்பில் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது கவிஞரும், தமிழரிஞரமான பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்படும் என்று தமிழ் பேராயம் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் கூறினார்.
  • முன்னாள் நீதிபதி .ஞானபிரகாசம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து விருதாளர்களை தேர்வு செய்துள்ளனர்.
  • புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதுக்கு நிவேதிதா லூயிஸ் எழுதிய வடசென்னை மூலம் பாரதியார் கவிதை விருதுக்கு மௌனன் யாத்ரிக்கா எழுதிய வேட்டுவம் நூறு நூலும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதுக்கு .ஆர்.முருகேசன் எழுதிய உதை பந்து, விழியன் எழுதிய மழைப்பூ ஆகிய இரு நூல்களும், ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருதுக்கு சித்தார்த்தன் எழுதிய யாதும் ஊரே நூலும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • .பி.ஜே.அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருதுக்கு பால.சிவகடாட்சம் எழுதிய தமிழர் மருத்துவம் நூலும், பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருதுக்கு இராம.குருநாதன் எழுதிய கவிதை மரபும் தொல்காப்பியமும் நூலும், முத்தமிழறிஞர் கலைஞர் சமூக நீதி விருதுக்கு கரூவூர் கர்னல் எழுதிய தமிழரின் சுற்றுவட்ட பாதையில் தந்தை பெரியார், குடந்தை பாலு எழுதிய உலக தலைவர் அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு நூல்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதுக்கு மு.அரிகிருஷ்ணன் எழுதிய மணல் வீடு நூலும், தொல்காப்பியர் தமிழ்ச் சங்கம் விருதுக்கு வி.முத்து எழுதிய புதுவை தமிழ் சங்கம் நூலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

3.குட்டி காவலர்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்

  • ‘குட்டி காவலர்’ எனும் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
  • தமிழ்நாடு அரசும், கோவையில் உயிர் அறக்கட்டளையும் இணைந்து இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை வடிவமைத்துள்ளன.
  • இளம் பள்ளி குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அதன் மூலமாக அவர்களை சாலை பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே ‘குட்டி காவலர்’ திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • ஆசிய சாதனை புத்தகம்:
  • சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் அதிக மாணவர்கள் பங்கேற்றனர்.
  • மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

மத்திய செய்திகள்

1. சமையல் எரிவாயு இழப்பீட்டுக்கு மானியம்

  • 2020 ஜூன் முதல் 2022 ஜூன் வரையில் சந்தை விலையை விட குறைவான விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய ஒருமுறை தொகையாக ரூபாய் 22,000 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • இந்த தொகை ஐஒசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.

2. தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 ஏ வின் கீழ் வழக்குப் பதிய முடியாது

  • 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 பிரிவின் படி கணினி அல்லது தொலைத் தொடர்பு சாதனம் மூலம் ஆட்சியபத்துக்குரிய தகவலை வெளியிடும் நபருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
  • எனினும் கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி எதையும் தெரிந்து கொள்ளும் பொது மக்களின் உரிமையை 66 ஏ பிரிவு நேரடியாக பாதிக்கிறது என கூறிய உச்சநீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு அந்த பிரிவை ரத்து செய்தது.
  • ஆனால் அந்த பிரிவின் கீழ் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
  • அப்போது நீதிபதிகள் கூறுகையில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ரத்து செய்யப்பட்ட 66 ஏ பிரிவின் கீழ் எந்த ஒரு நபர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது.
  • அந்த பிரிவை மீறி உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் எந்தவொரு புகாரையும் பதிவு செய்ய வேண்டாம் என்று ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

3. எண்ணெய்-எரிவாயு : இந்தியா, அமெரிக்கா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையொப்பம்

  • பருவநிலை நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவும், அமெரிக்காவும் தனியார் துறைகளின் பலத்தை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருநாடுகளுக்கு இடையே எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் நான்கு பெரிய ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகின.
  • இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும், எரிவாயு நொதிப்பு தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்பம் நிறுவனமான லான்சா டெக் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையப்பமானது.
  • லான்சா ஜெட் நிறுவனம் காப்பரிமை பெற்ற தொழில்நுட்பத்தின் மூலமாக நீடித்த விமான எரிவாயு உற்பத்தி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வாகன புகை உமிழ்வு அளவீடு மற்றும் குறைப்புக்கு தீர்வு காண்பது தொடர்பாக கெய்வ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான அவந்த்திகா எரிவாயு நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • அதுபோல இன்ஜினியர் இந்திய நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் யுஓபி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
  • நான்காவதாக பிபிசிஎல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான இந்திர பிரஸ்தா எரிவாயு நிறுவனத்திற்கும், பக்கெர் ஹவுஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4. அகில இந்திய தரவரிசையில் தில்லி அரசு பள்ளிகள் முதலிடம்

  • நாட்டில் மாநில அரசு பகல் நேர பள்ளிகளுக்கான தரவரிசையில் தில்லியில் உள்ள 2 பள்ளிகள் முதலிடத்தை பெற்றுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
  • இதற்காக கல்வி குழுவை அவர் பாராட்டினார்.
  • கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உலக கல்வி இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
  • இதன் சமீபத்திய தரவரிசையில் தில்லி அரசு நடத்தும் துவாரகா செக்டார் 10ல் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளி முதலிடத்தையும், யமுனா விஹாரில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
  • தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஐந்து பள்ளிகள் தில்லியை சேர்ந்தவை ஆகும்.

5. குவைத்துக்கான புதிய இந்திய தூதர் நியமனம்

  • வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக வெளியுறவு பணி மூத்த அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா நியமிக்கப்பட்டார்.

6. சர்வீசஸ் சாம்பியன்; தமிழகம் ஐந்தாம் இடம்

  • குஜராத்தில் நடைபெற்று வந்த 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.
  • இப்போட்டியில் தொடர்ந்து நான்காவது முறையாக சர்வீசஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
  • தமிழகம் ஐந்தாம் இடம் பிடித்தது.
  • ஏழாண்டுகளுக்கு பிறந்த பிறகு நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் சுமார் 8000 பேர் பங்கேற்றனர்.
  • கேரளத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் போட்டியில் 5 தங்கம், இரண்டு வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தமாக எட்டு பதக்கங்கள் வென்று சிறந்த வீரராக தேர்வானார்.
  • கர்நாடக நீச்சல் வீராங்கனை ஆஷிகா ராமச்சந்திரா ஆறு தங்கம், 1 வெண்கலத்துடன் போட்டியிலேயே சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
  • வெண்கலம் வென்ற குஜராத்தை சேர்ந்த சௌவுரியஜித் காய்ரே போட்டியில் பதக்கம் வென்ற மிக இளம் வீரர் ஆனார்.
  பதக்க பட்டியல் அணி  தங்கம்  வெள்ளி  வெண்கலம்  மொத்தம்
சர்வீசஸ்613532128
மகாராஷ்டிரம்393863140
ஹரியானா383840116
கர்நாடகா27233888
தமிழகம்25222774
கேரளம்23181354
மத்திய பிரதேசம்20252166
உத்திரபிரதேசம்20181856
மணிப்பூர்20102050
பஞ்சாப்19322576

7. பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் மெட்டா

  • பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் மெட்டா நிறுவனத்தை இணைத்து ரஷ்யா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
  • facebook, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம் மெட்டா அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட இந்த நிறுவனம் உக்கிரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படையெடுப்பாளர்களுக்கு மரணம் போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட முடியும் என்று அறிவித்தது.
  • இந்த அறிவிப்பை தொடர்ந்து ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை தடை செய்து அந்நாட்டில் உள்ள மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இந்த சூழலில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் அமைப்புகளின் பட்டியலில் மெட்டாவை இணைத்து ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு அமைப்பான ராஸ்ஃபின் மானிட்டரிங் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையை தொடர்ந்து தாலிபன் உள்ளிட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் வலது சாரி தேசியவாத குழுக்கள், ரஷ்ய எதிர்க்கட்சியினர் உள்ள பட்டியலில் மெட்டா இணைந்துள்ளது.

CA 13.10.2022(English Version)

State news

1. Devang Sanctuary

  • The Government of Tamil Nadu has announced that India’s first Devang sanctuaries will be established in Dindigul and Karur districts on an area of ​​11,806 hectares.
  • Devang is a nocturnal mammal. This benefits farmers by hunting pests that damage crops.
  • Thus devangs play an important role in ecological and terrestrial ecosystem.
  • The International Center for Conservation of Nature has listed the Dewang as an endangered species.
  • Government of Tamil Nadu has also taken steps to protect many other endangered species like Devang.
  • According to the Environment Climate Change and Forest Department, steps have been taken to include Sea Cow Sanctuary, Ushveli Bird Sanctuary, Agathiyar Hill, Elephant Sanctuary, Tirupur Sanctuary, 13 wetland areas as Ram Char Chartered Areas.

2. SRM Tamil Barayam Award

  • On behalf of SRM Tamil Archdiocese, ‘Parivender Bainthamil Award’ will be presented to the poet and Tamil scholar Prof. Sirppi Balasubramaniam, said the founder of Tamil Archdiocese DR. Parivendar.
  • A committee headed by former judge K. Gnanaprakasam has examined and selected the awardees.
  • ‘Vadachennai’ written by Nivedita Lewis for the Innovator Literary Award, ‘Vedtuvam Udoor’ by Maunan Yatrika for the Bharatiyar Poetry Award, ‘Uthai Bandhu’ by AR Murugesan and ‘Malaipoo’ by Villyan for the A. Valliappa Kulanthai Literature Award, G. Siddharthan’s book ‘Yadum Ure’ has also been selected for the U.Pope Translation Award.
  • ‘Tamil Medicine’ written by Bala Sivakatsam for A.P.J. Abdul Kalam Science Tamil and Technology Award, ‘Kavithai Marabum Tolkappiyamum’ written by Rama.Krunathan for Parithimaal Artist Tamil Scholar Award, and Tamilarin Sutruvatta paathayil Thanthai Periyar’ written by Karuvur Karnal for Muthamizhal Artist Social Justice Award. ‘World Leader Annal Ambedkar’ written by Kudantha Balu.
  • The book ‘Manal Veedu’ written by M. Arikrishnan has been selected for Sudeshamithran Tamil magazine award and the book ‘Puduvai Tamil Sangam’ written by V.Muthu has been selected for the Tholkappiyar Tamil Sangam award.

3. ‘Little Guard’ Road Safety Awareness Programme

  • Chief Minister M.K.Stalin started a road safety awareness program for students called ‘Kuti Kavald’.
  • Government of Tamil Nadu and Coimbatore Life Trust have jointly designed this road safety awareness programme.
  • The objective of the ‘Kuti Kavad’ program is to sensitize young school children about road safety awareness through a tailored curriculum and thereby make them ambassadors of road safety.
  • Asian Book of Records:
  • More students participated in Coimbatore to create awareness about road safety.
  • This event in which the students took part was included in the Asian Book of Records.

Central News

1. Subsidy for gas cooking compensation

  • The central government has sanctioned a one-time payment of Rs 22,000 crore from June 2020 to June 2022 to cover losses incurred due to sale of domestic cooking gas at prices below the market price.
  • This amount will be given to three public sector oil companies namely IOC, PPCL and HBCL.

2. No case can be filed under Section 66A of the IT Act

  • Section 66A of the Information Technology Act, 2000 provides for imprisonment of up to three years and fine for any person who discloses illegal information through a computer or telecommunication device.
  • However, pointing out the importance of freedom of expression, the Supreme Court said that Section 66A directly affects the right of the general public to know anything and canceled that section in 2015.
  • But a petition has been filed in the Supreme Court on behalf of a voluntary organization that continues to register cases under that section.
  • The petition came up for hearing before a bench headed by Chief Justice U.U. Lalit.
  • Then the judges said that no case can be registered against any person under the repealed Section 66A of the Information Technology Act.
  • Chief Secretaries of all States, DGPs and concerned officers in Union Territories are directed to instruct the entire police force not to register any complaint under the alleged violation of that section.

3. Oil-Gas : Four agreements between India, USA Signature

  • Four major oil and gas deals were signed between the two countries, demonstrating how India and the US can harness the power of the private sector to address climate action and energy security issues.
  • In this, an agreement was signed between Indian Oil Company and Lanza Tech, an American biotech company, which is an international leader in gas fermentation technology.
  • The agreement was signed to produce sustainable aviation gas through Lanza Jet’s patented technology.
  • An agreement was entered into between Cave Company’s joint venture company, Avantika Gas Company, to provide solutions for measurement and reduction of vehicle emissions.
  • Similarly MoU has been signed between Engineer India Company and UOP Company of America.
  • Fourthly, an agreement has been signed between BPCL’s joint venture Indra Prastha Gas Company and Baker House Company.

4. Delhi Government Schools top in All India Ranking

  • Delhi Chief Minister Arvind Kejriwal has proudly mentioned that 2 schools in Delhi have topped the ranking of state government day schools in the country.
  • He praised the Education Committee for this.
  • The ‘World Education’ website for educators, teachers and parents publishes the ranking of schools every year.
  • In its latest ranking, Rajkiya Pratibha Vikas Vidyalaya, Dwarka Sector 10 run by the Delhi government has been ranked first and Rajkiya Pratibha Vikas Vidyalaya, Yamuna Vihar has been ranked second.
  • Five of the top 10 ranked schools are from Delhi.

5. Appointment of new Indian Ambassador to Kuwait

  • Senior Foreign Service officer Adarsh ​​Swaika has been appointed as the new Indian Ambassador to one of the Gulf countries, Kuwait.

6. Services Champion; Tamil Nadu is fifth

  • The 36th National Games held in Gujarat concluded.
  • Services won the overall champion title for the fourth consecutive time in the tournament.
  • Tamil Nadu ranked fifth.
  • Around 8000 people participated in these competitions which were held after seven years of birth.
  • Kerala swimmer Sajan Prakash won a total of eight medals including 5 gold, 2 silver and 1 bronze and was selected as the best player.
  • Karnataka swimmer Ashika Ramachandra was adjudged the best athlete of the tournament with six gold and 1 bronze.
  • Souvriyajit from Gujarat who won bronze became the youngest medalist at the Khairy event.
  Medal list team  Gold  Silver  Bronze  Total
Services613532128
Maharastra393863140
Haryana383840116
Karnataka27233888
Tamilnadu25222774
Kerala23181354
Madhya Pradesh20252166
Uttar Pradesh20181856
Manipur20102050
Punjab19322576

7. Meta in list of terrorist organizations

  • Russia has taken steps to include Meta in the list of terrorist organizations.
  • Facebook, Instagram’s parent company Meta America, has announced that it will be able to publish controversial posts on Facebook and Instagram, such as the death of Russian invaders in the war against Ukraine.
  • The announcement was followed by a Moscow court banning Facebook and Instagram in Russia.
  • In this context, Russia’s financial watchdog ‘Rosfin Monitoring’ has added Meta to the list of organizations involved in extremism and terrorism.
  • Following this move, Meta joins a list of foreign terrorist organizations including the Taliban, right-wing nationalist groups, and the Russian opposition.