TNPSC Current Affairs – Oct 04, 2022

0
42

CA 04.10.2022(Tamil Version)

முக்கிய தினங்கள்

1. 04.10.2022

  • உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கொடி காத்த குமரன் பிறந்த நாள்.
  • இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மத்திய செய்திகள்

1. விமானப்படையில் உள்நாட்டு ஹெலிகாப்டர்கள்

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்கு இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பாகிஸ்தானுடனான 1999 கார்கில் போருக்கு பிறகு ஏற்பட்ட தேவை காரணமாக இலகுரக ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
  • அதனை அடுத்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது.
  • ஒவ்வொன்றும் 5.8 டன் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை.
  • இந்த இலகு ரக ஹெலிகாப்டர்களுக்கு பிரசண்ட் என அமைச்சர் ராஜ்நாத் சிங் பெயரிட்டார்.
  • ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து இவ்வகையைச் சேர்ந்த 10 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • தற்போது முதல் கட்டமாக நான்கு ஹெலிகாப்டர்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளன.

2. ஸ்வீடன் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு

  • மனித சமூகத்தின் பரிணாமம் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு தொடர்பான அறிவிப்பை தேர்வு குழு செயலாளர் தாமஸ் பெர்ல்மான் ஸ்வீடனின் ஸ்டாக் ஹோம் நகரில் அறிவித்தார்.
  • மனிதர்களின் பரிணாமம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டதற்காக ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வாண்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
  • மனிதர்களின் பரிணாமம் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்ட பாபோ, நவீன மனிதர்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதர்களின் முந்தைய பரிணாமமான நியாண்டர்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணு தொகுதிகளுடன் ஒப்பிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
  • நியாண்டர்தால், டெனிசோவன் ஆகிய இனக்குழுக்கள் இணைந்தே மனித இனம் உருவானதாக தனது ஆய்வின் மூலமாக அவர் கண்டறிந்து தெரிவித்தார்.
  • முந்தைய இன குழுக்களில் இருந்து மனிதர்களின் இனக்குழு தனித்துவமானது என்ற அவரின் கண்டுபிடிப்பால் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் குறித்து அதிக தகவல்கள் தெரிய வந்ததாக நோபல் தேர்வு குழு தெரிவித்துள்ளது.
  • குழுவினரின் கண்டுபிடிப்பானது கரோனா உள்ளிட்ட நோய் தொற்றுகளுக்கு எதிராக மனிதர்களின் மரபணு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள உதவியதாக குழு தெரிவித்தது.

3. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: ரூபாய் 912 கோடி ஒதுக்கீடு

  • பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்துக்காக ரூபாய் 912 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு சார்பில் ரூபாய் 547 கோடியும் மாநில அரசின் பங்காக ரூபாய் 365 கோடியும் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக மத்திய மாநில அரசுகள் சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.
  • பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ₹2.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
  • மத்திய அரசு அறுபது சதவீதம் நிதியை ஒதுக்கும் நிலையில் மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசு வழங்கி வருகிறது.

CA 04.10.2022(English Version)

Important days

1. 04.10.2022

  • World Animal Day is celebrated every year on October 4.
  • Birthday of kodi kaatha kumaran.
  • Today is celebrated as Wild Animal Day as the veneration of Francis of Assisi, a naturalist and deity of animals, falls on October 4.

Central News

1. Domestic Helicopters in the Air Force

  • Induction of four indigenously produced light attack helicopters into the Air Force was held.
  • Central government decided to indigenously manufacture light helicopters due to demand after 1999 Kargil war with Pakistan.
  • After that, Hindustan Aeronautics Company (HAL) has manufactured these helicopters.
  • Weighing 5.8 tonnes each, these helicopters are capable of engaging and destroying aerial targets.
  • Minister Rajnath Singh named these light helicopters as ‘Present‘.
  • The Indian Air Force has signed an agreement to purchase 10 helicopters of this type from HAL.
  • At present four helicopters have been inducted into the force in the first phase.

2. Nobel Prize to Swedish Scientist

  • Swedish scientist Svante Pabo has been awarded the Nobel Prize for his research on the evolution of human society.
  • The announcement regarding this year’s Nobel Prize in Medicine was made by Selection Committee Secretary Thomas Perlman in Stockholm, Sweden.
  • He informed that Swedish scientist Svante Pabo will be awarded the Nobel Prize for his research on human evolution.
  • Pabo, who carried out intensive studies on the evolution of humans, compared the genome of modern humans with the genomes of Neanderthals and Denisovans, the earlier evolution of humans.
  • Through his research, he discovered that the human race was formed by the Neanderthal and Denisovan ethnic groups.
  • His discovery that the human race is unique from previous race groups has revealed more information about the human immune system, the Nobel selection committee said.
  • The team’s discovery helped them understand how the human genome works against infections, including the coronavirus, the team said.

3. Prime Minister House Construction Scheme: Allocation of Rs 912 Crores

  • Rs 912 crore has been earmarked for the Prime Minister’s house construction project.
  • According to the decree, Rs 547 crores have been allocated on behalf of the central government and Rs 365 crores as the state government’s share.
  • The Prime Minister’s Housing Project was launched in 2015 to demolish slums and build concrete houses for all.
  • Under this scheme, funds are allocated on behalf of Central and State Governments to select eligible beneficiaries and construct concrete houses.
  • Beneficiaries who apply under the Prime Minister’s House Building Scheme are given a subsidy of 2.75 lakh each for building houses.
  • While the central government allocates sixty percent of the funds, the remaining 40 percent is provided by the state government.